பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க இன்டர்நெட் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவரும் பூனம் பாண்டேவின் கவர்ச்சி படங்கள் தான் காரணம் என்று கூறப்படுவதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.
பூனம் பாண்டே யாரென்று உங்களுக்கே தெரியும். இருந்தாலும் சொல்கிறோம் ஏதோ மாடலிங் செய்து கொண்டிருந்த அவர் இந்திய அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வருவேன் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு பப்ளிசிட்டி தேடினார். பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது அனைத்தையும் துறந்து நிர்வாண போட்டோவை ரிலீஸ் செய்தார்.
இதற்கிடையே அவ்வப்போது முக்கால் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவார். இதெல்லாம் பத்தாது என்று நஷா என்ற இந்தி படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார். இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க இன்டர்நெட் மற்றும் பத்திரிக்கைகளில் வரும் பூனம் பாண்டேவின் ஆபாச படங்கள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பூனம்(அதிரிச்சி அடைந்துவிட்டாராம்) கூறுகையில்,
என் புகைப்படங்கள் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காரணமாம். ஹா, ஹா, நிஜமாகவா? டெல்லியில் கற்பழிப்பு நடந்தபோதும் இதைத் தான் கூறினார்கள். நான் வருவதற்கு முன்பு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கவே இல்லையா? என்றார்.
நான் என்ன செய்தேன்?
சமூக பிரச்சனைக்கு என் மீது ஏன் குற்றம் சுமத்துகிறார்கள்? நான் இந்த உலகில் ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்கிறேன். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டால் யார் மீதாவது குற்றம் சுமத்துவது. அது ஏன் என் மீது? நான் என்ன செய்தேன்?(அப்பொழுது குளியல் அறை காட்சிகளை வெளியிட்டது யாரோ?) என்று ஒன்றுமே செய்யாதது போன்று கேட்கிறார் பூனம்.
படத்தை பார்த்து இல்லை
ஆண்கள் புகைப்படங்கள் மற்றும் படங்களைப் பார்த்துவிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்வதில்லை என்கிறார் பூனம்.
பீர் பார்கள்
பீர் பார்களை மீண்டும் திறந்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். ஆண்களுக்கு தங்கள் தாகத்தை தீர்க்க ஏதாவது கிடைக்கும் என்று பூனம் தெரிவித்துள்ளார்.
நான் நியூடாவே..
நான் ஒருபோதும் நிர்வாணமாக போஸ் கொடுத்ததே இல்லை. கொல்கத்தா அணி வென்றபோது வெளியான என்னுடைய நிர்வாண படங்கள் போலியானவை. நான் நிர்வாணமாக வருவேன் என்றேன். ஆனால் வந்தேனா? என்று நம்மையே கேட்கிறாரப்பா பூனம்.
Tuesday, August 27, 2013
Subscribe to:
Post Comments (Atom)
Receive all updates via Facebook. Just Click the Like Button Below▼
▼
0 comments:
Post a Comment