உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. அந்த படத்தில் படம் முழுக்க அவருடன் சந்தானமும் வந்தார்.
அதனால் அவரை வைத்தே பேலன்ஸ் பண்ணி ஓரளவு நடித்து தனது ஹீரோ இமேஜை காப்பாற்றிக் கொண்டார் உதயநிதி. அதனால் அதையடுத்து தற்போது தான் நடிக்கும் இது கதிர்வேலன் காதல் படத்திலும் சந்தானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
ஆனால், அவரோ இதுவரை படப்பிடிப்பு நடக்கும் ஏரியா பக்கமே எட்டிப் பார்க்கவில்லையாம்.
இவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்ததால், ஒரு வாரம் மட்டும் கால்சீட் தருகிறேன் சமாளிக்க முடியுமா? என்றாராம். இதனால் கடுப்பான டைரக்டர், அவருக்குப் பதிலாக வேறு காமெடியனை வைத்து படத்தை முடித்து விடுவோம் என்றாராம். ஆனால் உதயநிதி குறுக்கிட்டு, சந்தானம் தான் வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டாராம்.
முதல் படத்தைப் போலவே இந்த படத்திலும் காமெடி நிறைய உள்ளது. அதனால் சந்தானம் வந்தால்தான் என்னால் பேலன்ஸ் ப்ணணி நடிக்க முடியும். புது காமெடியனைப் போட்டால் அது சரிவராது என்று சொல்லி விட்டாராம்.
இதனால் சந்தானம் வரும்போது வரட்டும், அதன் பிறகு படப்பிடிப்பு எப்போது நடத்துவது என்பது பற்றி யோசிக்கலாம் என்று கூறி காத்திருக்கிறது இது கதிர்வேலன் காதல் படக்குழு.
0 comments:
Post a Comment