Sunday, May 5, 2013


கூட்டிக் கழிச்சிப் பார்த்ததுல கடைசியா 25 கோடி ரூபாய் என்று பட்ஜெட் எகிறியதால் சிம்புவை பேக்கப் செய்துவிட்டு மீண்டும் தனது புதிய படத்துக்கு விமலை ஹீரோவாக்கியிருக்கிறார் டைரக்டர் சுந்தர்.சி

விஷால், சித்தார்த், விமல் என்று இள வயசு ஹீரோக்களுக்கு ஏற்றார் போல கதைகளை உருவாக்கி மினிமம் பட்ஜெட் படங்களை டைரக்ட் செய்து அதன் மூலம் காசு பணத்தை அள்ளிக் கொண்டிருக்கிறார் சுந்தர்.சி

தற்போது இவர் டைரக்‌ஷனில் தயாராகியிருக்கும் "தீயா வேலை செய்யணும் குமாரு" படம் இன்னும் சில வாரங்களில் ரிலீஸாக இருப்பதை அடுத்து புதிதாக ஒரு படத்தை டைரக்ட் செய்ய திட்டமிட்டிருந்தார் சுந்தர்.சி.

இந்த புதிய படத்தில் சிம்புவை ஹீரோவாகப் போட்டு எடுக்கலாமே என்று விரும்பினார் யு டிவி தனஞ்செயன். இதற்காக டைரக்டர் சுந்தர்.சியை அழைத்து சிம்புவிடம் கதையை சொல்லி அவருடன் சேர்ந்து கணக்கு போட ஆரம்பித்தார். ஆனால் சிம்புவும், தனஞ்செயனும் சேர்ந்து போட்ட கணக்கு 25 கோடியில் என்ற மெகா பட்ஜெட்டில் வந்து முடிந்ததாம்.

சிம்புவை நம்பி எப்படி 25 கோடி ரூபாய் செலவழிப்பது? வம்பை வாங்கி மடியில் கட்டிக் கொள்ள 25 கோடி செலவு செய்யணுமா? என்று நினைத்த தனஞ்செயன் அவர், ஒருவழியாக சுந்தர்.சி.யை மீண்டும் அழைத்து ‘கலகலப்பு பார்ட்- 2’ எடுங்க. விமல் மாதிரி எக்னாமிக்கல் ஆர்ட்டிஸ்ட்டே ஹீரோவாப் போதும்" என கூறிவிட்டாராம்.

இப்போது சுந்தர்.சியும் தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க சிம்புவுக்கு குட்பை சொல்லிவிட்டு விமலுக்காக திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக நடந்த இந்த பரமபத விளையாட்டில் ரொம்பவே அப்செட்டானது சிம்புதானாம். அப்புறம் 25 கோடின்னா சும்மாவா..?

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below