விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து கூகுள் கூகுள் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி கடந்த 11ம் தேதி சென்னை நேரு அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை வாங்கிய முதல் இந்தி நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
கமல் ஹாசன் செவாலியே சிவாஜி கணேசன் விருதை ஷாருக்கானுக்கு வழங்கினார். ஷாருக்கான் விஜய்யுடன் சேர்ந்து துப்பாக்கி படத்தில் வரும் கூகுள் கூகுள் பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்.
கமல் ஹாசனுடன் ஹேராம், அஜீத்துடன் அசோகா படத்தில் நடித்தது இனிமையான அனுபவம் என்றார் ஷாருக்.தான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளராக இருந்தாலும் தனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தான் பிடிக்கும் என்று ஷாருக்கான் தெரிவித்தார்.
ஷாருக்கானின் ரா ஒன் படத்தில் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment