கொலிவுட்டில் முன்னணி நடிகையாக வளர்ந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தமன்னா.
அயன், பையான என பட்டைய கிளப்பிய தமன்னா, பத்தாண்டுகளாவது தமிழில் கொடி கட்டிப் பறப்பார் என்ற பேச்சு நிலவியது.
அயன், பையான என பட்டைய கிளப்பிய தமன்னா, பத்தாண்டுகளாவது தமிழில் கொடி கட்டிப் பறப்பார் என்ற பேச்சு நிலவியது.
ஆனால் என்ன காரணமோ வேங்கை படத்திற்கு பின் தமிழில் வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு மற்றும் இந்திக்கு இடம் பெயர்ந்தார்.
இந்நிலையில் அஜீத் படத்தின் மூலம் மீண்டும் கொலிவுட்டுக்கு வருகிறார் தமன்னா.
அதோடு முதல் ரவுண்டை விட படு கிளாமராக நடிக்க இருப்பதாகவும் பரபரப்பு தீயை கொளுத்திப் போட்டுள்ளார், தமன்னா.
இந்தியில் போதிய வாய்ப்பு இல்லாததால் தான் மீண்டும் கொலிவுட்டுக்கு வருகிறீர்களா என்ற கேள்விக்கு, இந்தியில் தொடர்ந்து பிசியாக நடித்தாலும், தமிழ், தெலுங்கிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
தேசிய அளவில் அனைத்து முக்கிய மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்கிறாராம்.
0 comments:
Post a Comment