பாலிவுட் போக நயன்தாரா தயங்குவது ஏன்? : ரகசியம் அம்பலம்
நயன்தாரா பாலிவுட் போக தயங்குவது ஏன் என்ற ரகசியம் பற்றி பாலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. அசின், காஜல் அகர்வால், இலியானா, தமன்னா, பியா, பிரியாமணி, டாப்ஸி என வரிசையாக தென்னிந்திய நடிகைகள் பால¤வுட்டுக்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர்.
அதிகபட்ச சம்பளம், சர்வதேச அளவில் அங்கீகாரம் போன்றவை ஹீரோயின்களை பாலிவுட்டுக்கு இழுத்துச் செல்கிறது. இந்த வரிசையில் நயன்தாராவுக்கும் பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ஆனால் அதை ஏற்க மறுத்து வருகிறார்.
சமீபத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்தி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்தது. பட இயக்குனர் ரோஹித் ஷெட்டி தொடர்புகொண்டு நயன்தாராவிடம் இது பற்றி பேசினார். அதை நயன்தாரா ஏற்க மறுத்துவிட்டார்.
பின்னர் அந்த பாடலுக்கு ஆட பிரியாமணி ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் ‘எதிர்நீச்சல் என்ற தமிழ் படத்தில் தனுஷுடன் ஒரு பாடலுக்கு ஆட நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டபோது உடனடியாக ஒப்புக்கொண்டார். மேலும் அஜீத்துடன் ‘வலை‘ மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
நயன்தாரா இந்தி படங்களில் நடிக்க மறுப்பது ஏன் என்பது பற்றி பாலிவுட் இணையதள பக்கத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் பிரபுதேவாவை காதலிக்கும்போது நயன்தாராவுக்கு பாலிவுட் வாய்ப்பு வந்தது. பிரபுதேவாவுக்கு பிடிக்காததால் நயன் வாய்ப்புகளை மறுத்தார்.
இப்போது நயன்தாராவுடன் நட்பாக பழகும் ஹீரோவுக்கும் அதேபோல் நயன் பாலிவுட்டுக்கு செல்வது பிடிக்கவில்லையாம். அதனால்தான் அவர் வாய்ப்புகளை மறுக்கிறாராம்.
0 comments:
Post a Comment