Wednesday, April 17, 2013

அஞ்சலி தமிழில் நடிக்க வருவதற்கு முன்பு தெலுங்கில்தான் நடித்தார். அப்படி அவர் நடித்த முதல் படத்தில் வெறும் 50 ஆயிரம்தான் சம்பளமாக பெற்றாராம். அதன்பிறகு மலையாளத்தில் நடித்த படத்திலும் அதே சம்பளத்தை பெற்றவர், பின்னர் தமிழுக்கு வந்து, கற்றது தமிழ் படத்தில் அவருக்கு சம்பளமே தரப்படவில்லையாம். 

அதையடுத்து சுந்தர்.சியுடன் நடித்த ஆயுதம் செய்வோம் படத்தில் ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தார்களாம். அதையடுத்து அங்காடித்தெருவுக்கு பிறகு படிப்படியாக தனது சம்பளத்தை உயர்த்திய அஞ்சலி, கடைசியாக வெளிவந்த சேட்டை படத்தில் 20 லட்சம் பெற்றுள்ளார்.

ஆனால் தெலுங்கில் இப்போது அவருக்கு 50 முதல் 60 லட்சம் வரை கொடுக்கிறார்களாம். வெங்கடேஷ், ரவிதேஜா, பவன் கல்யாண் என்று முன்னணி நடிகர்களின் படங்களாக கைவசம் வைத்திருக்கும் அஞ்சலி, சமீபத்தில் ஒரு வாரம் காலம மாயமாகி விட்டதில் இருந்து அவரது ஆந்திர சினிமா மார்க்கெட் இன்னும் பரபரப்படைந்துள்ளதாம். அதனால், அடுத்து அவரிடம் மெகாபட கம்பெனிகள் கால்சீட் கேட்டு நீண்ட க்யூவில் நிற்கிறதாம். அதன்காரணமாக, கைவசமுள்ள படங்களையடுத்து நடிக்கும புதிய படங்களுக்கு ஒரு கோடி வரை சம்பளம் கேட்கும் ஐடியாவில் இருக்கிறாராம் அஞ்சலி.

மேலும், ஆந்திராவில் உச்ச நடிகையாகும் நோக்கத்தில் முகாமிட்டுள்ள அவர், இப்போதைக்கு தமிழுக்கு வரப்போவதில்லையாம். புதிதாக வரும் நடிகைகளுக்கு 40 லட்சம் கொடுப்பவர்கள், நான் கேட்டால் 20 லட்சம் தரவே யோசிக்கிறார்கள் என்றும் கோடம்பாக்கத்தை குறை கூறுகிறாராம் அஞ்சலி.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below