அஜித் என்ற பெயரைக் கேட்டாலே இப்போது கைத்தட்டல் அதிர்கிறது. அந்தளவிற்கு இரசிகர்கள் நிறுத்தாமல் கைத்தட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
சென்னையில் விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாரூக்கான் அஜித் பற்றி சில வார்த்தைகள்கூறினார். அஜித் பெயரை உச்சரித்ததுதான் தாமதம் கைத்தட்டல் விண்ணை எட்டியது.
அஜித் மிகச்சிறந்த நண்பர். அவரும், அவருடைய மனைவியும் பழகுவதற்கு இனிமையானவர்கள். மிகப்பெரிய நடிகர் என்ற பந்தாவே கொஞ்சம் கூட இருக்காது.
சந்தோஷ் சிவன் இயக்கிய அஷோகா படத்தில் அஜித்தும் நானும் இணைந்து நடித்தோம். அஜித்துக்கு நான் நன்றி சொல்லவேண்டும். அந்த படத்தில் அவர் சம்பளமே வாங்காமல் நடித்தார்.
அசோகா படம் வெளியாகி பத்தாண்டுகளுக்குப் பின்னரும் அதனை நினைவு படுத்து ஷாரூக் பேசியது அஜித் இரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அஜித் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் கைத்தட்டல் எதிரொலித்தது.
0 comments:
Post a Comment