Wednesday, May 15, 2013



வயதானது முதிவடையும் போது கறுத்த முடி வெளுப்படைவது இயல்பான ஒன்று. ஆனால் இன்று 20 வயதான இளைஞர்களுக்கு தலைமுடியானது வெளுத்து முதுமையான தோற்றத்தை தருகிறது. அதற்கு காரணம் சத்தான உணவு இல்லாமை, உண்ணமை, முறையான கூந்தல் பராமரிப்பின்மை மற்றும் மனக்கவலை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் உடலில் ஏற்படும் நாட்பட்ட நோய்களாலும் இளநரை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக அனீமியா, மூக்கடைப்பு, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்பட்டாலும் இளநரையானது ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

1. நெல்லிக்காயை தினமும் ஒன்று என்று சாப்பிட்டு வர, நமது உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். மேலும் அதிலுள்ள வைட்டமின் ‘சி’ முடியை கருமையடையச் செய்யும்.

2. மருதாணி இலையை அரைத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி பூசி வந்தால், இளநரையானது விரைவில் நீங்கும்.

3. கறிவேப்பிலையை சமைக்கம் உணவில் அதிகம் சேர்த்து, அதனை சாப்பிட்டால் உடலில் இரும்புச்சத்து அதிகமாகி கூந்தலானது கருமையாக வளரும்.

4. நான்கு ஸ்பூன் மருதாணிப் பொடி, இரண்டு ஸ்பூன் காபி அல்லது டீ டிகாஷன், ஒரு முட்டை, அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து, தலையில் நன்றாக தேய்த்து, ஒரு மணிநேரம் ஊற வைத்துப் பின் கூந்தலை குளிர்ந்த நீரில் அலசினால் இளநரையானது படிப்படியாக குறையும். 
5. கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, கூந்தலுக்கு தடவி வந்தால் இளநரையானது வராமல் இருக்கும்.

6. வெள்ளைப் பூவான கரிசாலையை நன்கு காய வைத்து, அரைத்து பொடி செய்து, ஒரு மாதம் இளநீரிலும், ஒரு மாதம் தேனிலும் கலந்து உண்ண வேண்டும். இதனால் இளநரை மாறும்.

7. தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தலைக்கு பூசி நன்கு மசாஜ் செய்து, குளித்து வந்தால், இளநரையானது போகும்.
ஆகவே மேற்கூறிய இயற்கையான உணவினாலும், சரியான பராமரிப்பாலும் இளநரையை வராமலும், வந்த இளநரையை போகவும் செய்யலாம்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below