சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய நடிகை அஞ்சலி, 5 நாட்கள் ரகசிய இடத்தில் தங்கி இருந்தார்.
அஞ்சலியை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவை பாரதிதேவி தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ரகசிய இடத்திலிருந்த அஞ்சலி ஐதராபாத் பொலிஸ் துணை கமிஷனர் முன்பு சமீபத்தில் ஆஜரானார்.அஞ்சலி திடீரென்று காணாமல் போனதால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
பெங்களூரில் நடந்த ‘போல் பச்சான்’ தெலுங்கு பட ரீமேக் படப்பிடிப்பில் அவர் பங்கேற்காததால் அது ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், பொலிஸ் அதிகாரி முன்பு ஆஜரான அஞ்சலி விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன் என்றார்.அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள பஞ்சாக்னி என்ற இடத்தில் நடந்த ‘போல் பச்சன்’ படப்பிடிப்பில் அவர் நேற்று கலந்துகொண்டார்.
படப்பிடிப்புக்கு உதவியாளர்களுடன் வந்திருந்தார். எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக அனைவரிடமும் பேசிய அஞ்சலி, தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றார்.
இப்படத்தில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே ‘சீதம்மா வாகிட்லோ சிறுமல்லே செட்டு’ என்ற தெலுங்கு படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment