Friday, April 19, 2013


சிம்புவின் கைவசம் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படங்கள் இருக்கின்றன. இதையடுத்து அவர் ‘மன்மதன் 2’ம் பாகத்தை இயக்கி நடிப்பதாக தகவல் வந்துள்ளது. அதுகுறித்து கேட்டால், பதில் சொல்லாமல் சிரிக்கிறார்.

தவிர, பிரபல ஹீரோயினுடன் இணைத்து வரும் கிசுகிசுவைப் பற்றி கேட்டபோது, அதற்கு மட்டும் வாயைத் திறந்தார்.

‘இதற்குமுன் என்னையும், சில நடிகைகளையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. ஆனால், அனைத்தும் பொய்யாகி விட்டது. அப்பாவும், அம்மாவும் எனக்கு மணப்பெண் தேடும் விஷயத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

அவர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்வேன். இந்த ஆண்டா, அடுத்த ஆண்டா என்று விரைவில் தெரியும்’ என்ற சிம்பு, வேலூரில் மணப்பெண் கிடைத்திருப்பதாகச் சொல்வது குறித்து கருத்து சொல்ல மறுத்து விட்டார்.


0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below