மரபணுவின் தாக்கத்தினால் ஏற்பட்ட மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி(37) ‘மாஸ்டெக்டமி’ எனப்படும் 3 கட்ட அறுவை சிகிச்சையின் மூலம் தனது மார்பகங்களை அகற்றிவிட்டார்.
பின்னர், நவீன சிலிக்கான் செயற்கை மார்பகங்களை பொருத்திக்கொண்ட ஜோலி, புற்று நோயை எதிர்த்து தான் நடத்திய போராட்டத்தை பற்றி வெளிப்படையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கேமராவில் சிக்காமல் இருந்த ஏஞ்சலினா ஜோலி, இன்று லண்டனில் நடைபெற்ற தனது கணவர் பிராட் பிட் கதாநாயகனாக நடிக்கும் ‘வேர்ல்ட் வார் இசட்’ திரைப்படத்தின் அறிமுக விழாவில் பங்கேற்றார்.
பிராட் பிட்டுடன் கருப்பு உடை அணிந்து வந்த ஜோலி முன்பை விட அதிக தன்னம்பிக்கையுடன் காணப்பட்டார்.
அறிமுக விழா நடைபெற்ற லிசெஸ்டர் சதுக்கம், எம்பயர் அரங்கத்தில் செய்தியாளர்களிடையே பேசிய ஏஞ்சலினா ஜோலி, ‘புற்று நோய்க்கு எனது தாயை பறிகொடுத்த பின்னர், எனக்கு ஏற்பட்ட நோய்க்கு எடுத்துக்கொண்ட சிகிச்சையைப் பற்றி நான் வெளிப்படையாக அறிவித்தேன்.
இதன்பின்னர், மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பெண்களிடையே தோன்றியுள்ளது. புற்று நோய்க்கு எதிரான எனது போராட்டத்தில் பிராட் பிட் எனக்கு உறுதுணையாக இருந்தார்’ என்று கூறினார்.
0 comments:
Post a Comment