இளைஞர்கள் சிலர் ஒன்றுபட்டு உருவாக்கிய பாப் இசைக் குழு மமி பாய்ஸ். இதில் இந்திய சிங்கப்பூர் இளைஞர்கள் இணைந்துள்ளனர்.மேடை நிகழ்ச்சிகள், பாப் ஆல்பம், குறும்படம், திரைப்படங்களில் பாப் இசை பங்களிப்பு என்று இயங்கிவந்த மமி பாய்ஸ் நிறுவனம் தற்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.
அந்தப் படம்தான் 'டம் டீ' படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னோட்டமாக 'Dum Tea' என்கிற பெயரில் இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் ஆல்பமாக வெளியாகியுள்ளது. இதில் ஏழு பாடல்கள் உள்ளன.
இந்த ஏழு பாடலில் ஒரு பாடல் 'ரீனா ஐ லவ் யூ' வெளியாகி யூடியூபில் இரண்டு லட்சத்துக்கும் மேல் ஹிட்டடித்துள்ளது.இதற்கு இசை ஜூடு நிரஞ்சன்.
'ரீனா ஐ லவ்யூ' தவிர 'சுனாமிப் பெண்ணே', 'நட்புக்குள்ளே', 'டம் டீ', 'கண்ணாடி', 'துரத்துதே', விடியட்டுமே' என்று மற்ற பாடல்களும் ஹிட்டாக உள்ளன.'டம் டீ' யின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. டம் டீ படக்குழுவினர் கலந்து கொண்டனர். ரேடியோ ஜாக்கி தீனா கலந்து கொண்டு வெளியிட்டு குழுவினரை வாழ்த்தினார்.
'டம் டீ' யில் இயக்குநர் க்ரிஷேனோடவும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார். அவர் தவிர கெவி.ஜே,பார்டி நாயகர்களாக நடிக்கிறார்கள்.
தாங்கள் நேரில் சந்தித்த மாதிரியான முகவெட்டுள்ள நாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கிடைத்ததும் டூயட் காட்சிக்குத் தயாராகி விடிவார்கள்.
'டம் டீ' படம் பற்றி இயக்குனர் க்ரிஷேனோவிடம் கேட்ட போது, டென்ஷனில் மனச்சோர்வில் இருக்கும்போது இளைஞர்கள் இரண்டு விடயங்கள் செய்வாங்க. ஒன்று ஒரு டீ சாப்பிடுவார்கள். இல்லைன்னா ஒரு தம் அடிப்பார்கள்.
தம் அடிச்சாலும் டீ அடிச்சாலும் ரிலாக்சேஷனா இருக்கும்னு நினைக்கிறாங்க அதுபோல இந்த 'டம் டீ' படமும் இளைஞர்களுக்கு பெரிய ரிலாக்சேஷனா இருக்கும்.
நான் தமிழில் உலக அளவுல பாப் ஆல்பம் கொண்டு வரனும்னு நினைச்சேன்.
'டம் டீ' ஒரு ஜாலியான யூத்புல்லான படமாக இருக்கும். இதில் பிரச்சனைகள்,கஷ்டங்களை சொல்லியிருக்கோம். ஆனால் ஜாலியா கொமடியா சொல்லியிருக்கோம்.
இந்த படத்துக்கானகதை என்ன தெரியுமா? ஒரு தமிழ் இசைக்குழு இசைப்பயணம் செய்யும் போது சந்திக்கிற பிரச்சனைகள் தடைகள், போராட்டங்கள் தான் கதை.
இடையில் சந்திக்கும் பெண்கள், காதல் பற்றியும் கதை பேசும். இந்தப் படத்தின் கதைக்கு நாங்கள் சிரமப் படல நாங்க சந்திச்ச அனுபவங்களோட தொகுப்புதான் இந்தப்படம். நிஜமான வாழ்க்கையை விட சுவாரஸ்யம் இருக்கப் போகுதாங்கிற மாதிரியான கதையாக இது இருக்கும்.
இளைஞர்களின் போராட்டங்கள் எப்படி? அதை எல்லாம் எப்படி கொமடியா ஆனாயாசமா சந்திக்கிறாங்கன்றது இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்கும் என்கிறார்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் க்ரிஷேனோ ஒளிப்பதிவு ஆஞ்சாய் சாமுவேல். இசை - ஜூடு நிரஞ்சன் தயாரிப்பு எம்.பாய்ஸ் ரிக்காம்ட்ஸ் மற்றும் மமி பாய்ஸ் நிறுவனம்.
பாப் இசையின் புகழ்பரப்பும் வகையில் இளமை எனர்ஜி சீன்களுடன் உருவாகி வரும் இப்படம் முதல் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை, பெங்களூரில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
நாயகி தேடலும் நடக்கிறது. தேடல் முடிந்ததும் 'டம் டீ' படப்பிடிப்பை தொடரும் என்று கூறுகிறார்கள்.
0 comments:
Post a Comment