தற்போது என்னவென்று தெரியவில்லை, மக்கள் மத்தியில் இந்த ஆயுர்வேத மருத்துவ முறை பிரபலமாக இருப்பதோடு, பலரும் அதனையே பின்பற்றுகின்றனர். சொல்லப்போனால், சில நடிகைகள் கூட, தங்கள் அழகை பராமரிப்பதற்கு, இத்தகைய ஆயுர்வேத மசாஜ்களைத் தான் பின்பற்றுகின்றனர்.
அதிலும் ஆயுர்வேத மசாஜில் நவரக்கிழியை தொடர்ந்து வரும் ஸ்நேகதாரா மற்றும் ஸ்நானாதான் மிகவும் பிரபலமானது. இந்த மசாஜின் மகிமை என்னவெனில், முதலில் நவரை அரிசியை மூலிகைப் பாலில் ஊற வைத்து வடிகட்டி, பின் அந்த அரிசியை எடுத்து லேசாக வேக வைத்து, ஒரு மஸ்லின் துணியில் போட்டு கட்டிக் கொண்டு, உடல் முழுவதும் வடிகட்டிய மூலிகைப் பால் தொட்டு மசாஜ் செய்யப்படும்.
பின்னர் தலையிலிருந்து, கால் வரை மூலிகை எண்ணெய் ஊற்றி, நன்கு மசாஜ் செய்து, இறுதியில் நீரால் உடலை அலசிவிடப்படும்.
இந்த மசாஜால் மூட்டு வலிகள், செரிமானப் பிரச்சனை, உடல் வலி, மன அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளும் குணமாகும். குறிப்பாக இத்தகைய மசாஜை நடிகைகளில் மிகவும் பிரபலமான த்ரிஷா செய்துள்ளார்.
இதனால் தான் என்னவோ, இன்னும் சிக்கென்ற உடலுடனும் அழகாக ரசிகர்களின் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளார். கீழே த்ரிஷா செய்து கொண்ட ஆயுர்வேத மசாஜ் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.
English summary
3 Ayurvedic Massages To Rejuvenate You
Ayurveda is the ancient science that uses herbal materials for healing several illnesses. Ayurvedic massages have several health and beauty benefits. These days, Ayurvedic treatment is suddenly in vogue. So today we are going to discuss three very popular Ayurvedic massages namely; Navarakkizhi, Snehadhara and Snana. In the video below you can see exactly how all these three Ayurvedic massages are performed.
0 comments:
Post a Comment