பப்ளிசிட்டிக்காக திட்டமிட்ட ஆர்யா - நயன்தார திருமணம் நடைபெறாததால் ‘ராஜா ராணி’ படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு நமக்கு ஒரு மெயில் வந்தது. அதில் ஆர்யாவும், நயன்தாராவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் அந்த நிகழ்ச்சி நாளை அதாவது நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் இருந்தன.
மேலும் அதில் இருவரும் நிஜமாகவே திருமணம் செய்துகொள்ளப் போவது போல கூடுதல் தகவல்கள் இருக்க, அப்புறம் விசாரித்துப் பார்த்ததில் அது ஆர்யா- நயன்தாரா நடித்து வரும் ‘ராஜாராணி’ படத்துக்கான சீப்பான பப்ளிசிட்டி ஸ்டண்ட் என தெரியவந்தது.
சரி அப்படி திட்டமிட்டபடி நேற்று இரவு ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் அந்த திருமண ட்ராமா நடந்ததா என்றால் அதுதான் இல்லை.
‘வத்திக்குச்சி’ படத்தைத் தொடர்ந்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் டிவியின் ஒரு அங்கமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும் படம் தான் ‘ராஜாராணி’.
இந்தப்படத்தை அவரிடம் அசோஸியேட்டாக வேலை பார்த்த அட்லீ குமார் டைரக்ட் செய்து வருகிறார்.
ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வரும் இந்தப்படத்தின் ஸ்டோரியே ‘ரிலீஸ் நேர’ சிக்கலை சந்திக்ககூடிய ஏடாகூடமான ஸ்டோரி தான்.
ஆமாம், அதாவது ஆர்யாவும், ஜெய்யும் வெவ்வேறு பெண்களை காதலிப்பார்களாம், ஒரு கட்டத்தில் இருவருக்கும் அந்தப் பெண்கள் மீது வெறுப்பு வந்துவிட இரண்டு பேரும் அடுத்தவரின் காதலி மீது காதல் வந்து பண்டமாற்று முறைக்கு தயாராவார்களாம். அதனால் வரக்கூடிய பிரச்சனைகள் இந்த ‘ராஜாராணி’ படத்தின் கதையாம்.
இதற்கிடையே நேற்று சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விஜய் டிவியின் 7-வது விஜய் விருது விழா ஏகப்பட்ட சொதப்பல்களுடன் ‘ஏழரை விழா’வாக நடந்து முடிந்துள்ளதாம்.
குறிப்பாக அந்த விழாவில் ஒரு பகுதியாக நடைபெற இருந்த ‘ராஜாராணி’ படத்துக்கான ஆர்யா- நயன் தாரா திருமண பப்ளிசிட்டி கடைசி வரை நடைபெறவே இல்லையாம்.
அதற்கு மிக முக்கியமாக இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது...
ஒன்று : ஏ.ஆர்.முருகதாஸுக்கும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் பட நிறுனவத்துக்கும் இடையே லடாய் ஏற்பட்டு விட்டது. அதற்கு காரணம், அவரது தம்பியை ஹீரோவாக போட்டு தயாரித்த ‘வத்திக்குச்சி’ படத்தில் ஏகப்பட்ட பண இழப்பை சந்தித்ததால் அதில் ஆரம்பித்த லடாய் ‘ராஜா ராணி’ வரை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனாலோ என்னவோ ஏ.ஆர் முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கடைசி படம் இதுவாகத்தான் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
மற்றொன்று, இந்த விழாவுக்கு நயன்தாரா கடைசி வரை வரவேயில்லையாம். அதுமட்டுமில்லாமல் மேற்படி பப்ளிசிட்டி சமாச்சாரங்களும் கூட நயன்தாராவுக்கு முன்னதாக முறைப்படி தெரிவிக்கப்படவில்லையாம். கடைசி நேரத்தில் தான் இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறோம் என்ற தகவல் நயன்தாராவுக்கு தெரிவிக்கப்பட்டதாம்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட நயன்தாராவோ “ என்னிடம் பெர்மிஷன் கேட்காமல் எப்படி நீங்கள் இப்படி ஒரு சீப்பான பப்ளிசிட்டியை படத்துக்கு செய்யலாம்” என்று கொதித்து விட்டாராம். ஆனால் இதில் இன்னொரு காமெடியான சமாச்சாரம் என்னவென்றால் இந்த திருமண பப்ளிசிட்டி மேட்டரை உண்மை என நம்பிய தெலுங்கு மீடியாக்கள் நேற்றும் அதற்கு முந்தின நாள் இரவு முழுவதும் ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கு ஏதோ உண்மையிலேயே திருமணம் தான் என நம்பி அதை காலை முதல் மாலை வரை திரும்ப திரும்ப செய்திகளாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்களாம்.
அதிலும் சில தெலுங்கு மீடியாக்களோ ஒருபடி மேலேபோய் “ உங்க திருமணத்துக்கு ஏன் எந்த பிரபலங்களையும் கூப்பிடவில்லை” என்று நயன் தாராவிடம் கேட்டார்களாம்.
இன்னொரு பக்கம் நயன்தாராவைப் பற்றிய இந்த பப்ளிசிட்டி அஜித் நடித்து வரும் வலை படத்துக்குத் தான் என்று சிலர் நினைத்துக் கொண்டு, அஜித் இருக்கும் போது ஆர்யாவும், நயன் தாராவும் ஏன் பெரிதாக எக்ஸ்போஸ் பண்ண வேண்டும் என்று டைரக்டர் விஷ்ணுவர்தனை கேட்க...
ஆக மொத்தத்தில் ஒரு சீப்பானதோ என எண்ணத்தோன்றும் ஒரு திரைக்கதை கொண்ட இந்த ‘ராஜா ராணி’ படத்துக்கான பப்ளிசிட்டி இவ்வளவு சீப்பாக போய் முடியும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
0 comments:
Post a Comment