Sunday, May 12, 2013

சென்னை: கமல் ஹாசன் தனது நண்பர் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தைப் பார்த்து தனது கருத்தை தெரிவிக்கவிருக்கிறார்.

ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய பிறகு அவர் நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்தில் ரஜினி இரண்டு வேடத்தில் வருகிறார். இந்த படத்தை ரஜினி மட்டுமல்ல அவரது ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கமல், படத்தை பார்க்க வாங்களேன்

சினிமாவில் சகலமும் அறிந்த தனது நண்பர் கமல் ஹாசனை கோச்சடையான் படத்தைப் பார்த்து தனது கருத்தை தெரிவிக்குமாறு ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார்.

கமல் பார்த்த பிறகே ரிலீஸ் தேதி அறிவிப்பு

கமல் படத்தைப் பார்த்து தனது கருத்தை கூறிய பிறகு அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படுமாம். அதன் பிறகே கோச்சடையான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.

ரஜினிக்காக எதையும் செய்வேன்

ரஜினிக்காக எதையும் செய்வேன் என்றும், அவர் கேட்டால் ஒரு நாளும் மறுக்க மாட்டேன் என்றும் கமல் தெரிவித்துள்ளார். கமலும் சரி, ரஜினியும் சரி படிப்படியாக முன்னேறி தான் பெரிய இடத்தைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below