தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்தி சினிமா வரை கொடி நாட்டியிருப்பவர் காஜல்அகர்வால். இதில் தமிழ்ப்படங்களைப்பொறுத்தவரை இதுவரை கவர்ச்சி சமாச்சாரத்தில் அவர் கண்ணியம் மீறியதில்லை.
அளவான கிளாமரை மட்டுமே வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு தன் மீது ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். ஆனால், தெலுங்கு, இந்தியில் அப்படியல்ல. கவர்ச்சியில் அத்துமீறி நடித்துள்ளார் காஜல். குறிப்பாக சில தெலுங்கு படங்களில் தண்ணீருக்குள் காஜலை நீந்த விட்டு துகிலுரித்த கதைகளும் உண்டு.
ஆனால், இதை சுட்டிக்காட்டி சில இயக்குனர்கள் தமிழ்ப்படங்களிலும் அந்த மாதிரி நடிக்குமாறு கேட்டால், முடியவே முடியாது என்று அடம்பிடிக்கிறாராம். தெலுங்கு ரசிகர்களைவிட தமிழ் ரசிகர்கள் ரசனை மிக்கவர்கள். பட்டும் படாமலும் கவர்ச்சி காட்டினால்தான் இவர்களுக்கு பிடிக்கும். அதனால் ரசிகர்களை மனதில் கொண்டு எல்லைதாண்டிய கவர்ச்சி நடிப்புக்கு தடா போடுகிறேன் என்றும் சொல்லி ஜகா வாங்குகிறாராம்.
அதேபோல், இப்போதைய ரசிகர்கள் 2 மணி நேரம் ஜாலியாக இருக்கத்தான் தியேட்டருக்கே வருகிறார்கள். அதனால் அவர்களை சந்தோசப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களுக்கே நான் முக்கியத்துவம கொடுக்கிறேன் என்று சொல்லும் காஜல், அழுமூஞ்சி கேரக்டர்களில் நடிக்கவும் விரும்புவதே இல்லையாம்.
0 comments:
Post a Comment