கீழே உள்ள சீயானின் படத்தைப் பாருங்கள், சுகர் வந்த பேஷன்ட் மாதிரி. இந்த கெட்டப் ஐ படத்துக்காக.
ஐ படத்தைப் பற்றி வரும் யூகங்களை மட்டும் தொகுத்து படமாக்கினால் நூறு நாள் படமொன்று கியாரண்டி. ஐ யில் சீயான் விக்ரமுக்கு இரண்டுவிதமான கெட்டப்புகள். ஒன்று நல்ல புஷ்டியான அர்னால்டு உடம்பு. இன்னொன்று ஓமக்குச்சி சைஸில்.
அதில் அர்னால்டு போர்ஷனை ஷங்கர் முடித்துவிட்டாராம். பாக்கியிருப்பது ஓமக்குச்சி. அதற்காகதான் இப்படி துரும்பாக இளைத்திருக்கிறார் விக்ரம். ஆனாலும் ஷங்கருக்கு இந்த இளைப்பு போதவில்லை போலிருக்கிறது. மேலும் இளைக்கப் போகிறாராம்.
சினிமாவுக்காக விக்ரம் இன்னும் எத்தனை கிலோ வேண்டுமானாலும் இளைப்பார். பட், ஷங்கர் சார்… அதை பார்க்கப் போறது பாவப்பட்ட நாங்க சார்.
0 comments:
Post a Comment