Friday, May 10, 2013

கவர்ச்சியாக நடித்து பட வாய்ப்புகளை பிடிப்பதில் நடிகைகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது பாலிவுட்டிலிருந்து மீண்டும் தென்னிந்திய படங்களுக்கு திரும்பி இருக்கிறார் தமன்னா.

பாலிவுட் தந்த தைரியத்தில் தென்னிந்திய படங்களிலும் அதிரடி கிளாமருக்கு ஓகே சொல்கிறாராம். சமீபத்தில் நாக சைதன்யாவுடன் அவர் நடித்து வெளியாகிவுள்ள தடகா டோலிவுட் படத்தில் வழக்கத்தைவிட சற்று தாராளமாகவே கிளாமருக்கு இடம் கொடுத்திருக்கிறாராம். 

கடற்கரை நீச்சல் உடை காட்சிகள், நாக சைதன்யாவுடன் நெருக்கமான காட்சிகளில் அவர் கொடுத்திருக்கும் அதிரடி கவர்ச்சி போஸ்கள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாம். தமன்னாவின் கவர்ச்சியை முறியடிக்கும் வகையில் டாப்ஸி ஆடை குறைப்பில் துணிச்சல்காட்டி வருகிறாராம். இது பற்றி டாப்ஸி கூறும்போது, ‘பெயரிடப்படாத தெலுங்கு படத்தில் படுகிளாமர் வேடத்தில் நடித்திருக்கிறேன். 

ஏற்கனவே நடித்த ‘ஷேடோ‘ படத்தைவிட இதில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும்‘ என்றார். படத்துக்கு படம் ஏதாவது பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற மோதலில் ஹீரோயின்கள் கவனம் செலுத்துகின்றனர். 

ஹீரோயின்கள் கவர்ச்சி போட்டியில் குதித்திருப்பதற்கு கமர்ஷியல் யுக்தி காரணமாக இருந்தாலும் வாய்ப்புகளை பிடிக்கவே கிளாமருக்கு முக்கியத்துவம் தருவதாக சொல்லப்படுகிறது. 

பாலிவுட்டுக்கு சென்று அங்கு ஜொலிக்க முடியாததும் தமன்னா, டாப்ஸி, காஜல் அகர்வால் போன்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே அவர்கள் ஓவர் கவர்ச்சிக்கு மாறியிருக்கிறார்கள்

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below