நடிகை பூணம் பஜ்வா சேவல் படத்தில் மொட்டை தலையுடன் சிறப்பாகவே நடித்திருந்தார். ஜீவாவுடன் ஒன்றிரண்டு படங்களில் கடைசியாக நடித்ததோடு சரி, பூனம் பஜ்வாவை பிறகு தமிழ் சினிமா கண்டு கொள்ளவில்லை.
மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். கொஞ்சம் ஊதிப்போன அவரின் உடல்வாகு மலையாளிகளுக்கு பிரச்சனையாக இல்லை. தமிழில்தான் குண்டாயிட்டீங்க என்று ஓரம்கட்டினர். இதனால் சின்சியராக உடம்பை குறைத்து ஒரு போட்டோசெஷனும் சொந்தச் செலவில் எடுத்தார்.
இந்த முயற்சிக்கு கைமேல் பலன். த்ரிஷா நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் த்ரிஷா, ஓவியாவுடன் பூனம் பஜ்வாவும் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்குக் கிடைத்திருக்கும் தமிழ்ப்பட வாய்ப்பு இது. முன்பைவிட ஸ்லிம்மாகி பூனத்தை பார்க்க கூடுதல் அழகுடன் தெரிகிறார்.
நீங்களும் கீழுள்ள இணைப்பின் மூலம் பூனம் பஜ்வாவின் படத்தொகுப்பை பாருங்கள்… பூனம் இளைச்சிட்டாரா…?
0 comments:
Post a Comment