தமிழில் முன்னணி நடிகையாக வலம்வர வேண்டும் என ஆசைப்பட்ட லட்சுமிராய்க்கு எதிர்பார்த்தபடி படங்கள் அமையவில்லை.எனவே தாய்மொழியான கன்னட சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
என்றாலும் இந்தி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியே அவருக்கு இருப்பதால், பெங்களூர்வாசியான அவர் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி அங்கே குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது 25வது பிறந்த நாளை மும்பை கடலின் நடுப்பகுதிக்கு சென்று கொண்டாட திட்டமிட்ட லட்சுமிராய், தனது குடும்பத்தாருடன் ஒரு கப்பலில் கடலுக்குள் சென்று கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.
தனது 25வது பிறந்த நாள் மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி நடுக்கடலுக்குள் பிறந்த நாளை கொண்டாடியதாக தெரிவித்துள்ளார் லட்சுமிராய்.
0 comments:
Post a Comment