ஆர்யா நயன்தாரா...திருமணம்' தேதி - மே 11, நேரம் இரவு 9 மணி... -இப்படி வாசகங்கள் அடங்கிய ஒரு அழைப்பிதழ் பிரதியை இமெயிலில் அனுப்பி வைத்திருக்கிறார் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா.
கூடவே, இந்த செய்தி பல நாட்களாக காற்றில் மிதந்து வரும் செய்திதான் ....இதை பற்றி அறியாதவரோ தெரியாதவரோ யாரும் இல்லை ...இது ஆச்சரியமூட்டினாலும் அதிர்ச்சி தரும் தகவல் இல்லை ...
நெஞ்சை அள்ளிய அரசன் அரசியை தன்னிலை மறக்க செய்யும் தருணம் ...இந்த மாபெரும் தருணம் அரங்கேறும் நாள் நாளை ...' - என்று குறிப்பிட்டுள்ளனர்.இப்படி ஒரு அழைப்பிதழ் காலையில் எல்லா மீடியாக்களுக்கும் அனுப்பப்பட்டது. மற்ற விபரங்கள் எதுவும் இல்லை.
நாம் துப்பறிந்ததில் இருந்து ஆர்யாவும், நயன்தாராவும் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லீ குமார் இயக்கத்தில் நடித்து வரும் ராஜா ராணி படத்தின் புரமோஷன்கள் நாளை முதல் தொடங்கலாம் என்ற சூசகமான அறிவிப்புதான் இது என்று புரிகிறது.
ஏற்கெனவே இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது ஆர்யாவும் நயன்தாராவும் கோவா சர்ச்சில் வைத்து மோதிரம் மாற்றிக் கொண்டதாக செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.
ஆர்யாவுக்கும், நயன் தாராவுக்கும் இருக்கும் க்ளீன் இமேஜை வைத்து இப்படி ஒரு அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஆர்.முருகதாஸ் புரடக்க்ஷன்ஸ் வெளியிட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.
திருமண பந்தந்துக்குள் சிக்குகிற ஆட்களா அந்த ரெண்டு பேரும்..? ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்
Friday, May 10, 2013
Subscribe to:
Post Comments (Atom)
Receive all updates via Facebook. Just Click the Like Button Below▼
▼
0 comments:
Post a Comment