காஜல் அகர்வால் தற்போது படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் ஓய்வில் இருக்கிறார். அதனால் குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
குடும்பத்துடன் தற்போது லண்டனில் இருக்கும் இருக்கு காஜல் அகர்வால், அங்கு நடக்கும் விம்பிள்டன் போட்டிகளை நேரில் பார்த்து ரசித்து வருகிறார்.
அவருடன் அவருடைய தங்கை நடிகை நிஷா அகர்வால் மற்றும் பெற்றோருடன் சென்றிருக்கும் காஜல், அடுத்து சான்பிராசிஸ்கோ செல்ல இருக்கின்றார்.
ஆனால் இங்குள்ள சில விஷமிகள், காஜல் அகர்வாலுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் என்றும் திருமண விஷயமாகத்தான் காஜல் அகர்வால் லண்டனுக்கு சென்றிருக்கின்றார் என்றும் விஷமத்தனமாக கிளப்பி விட்டிருக்கின்றார்கள்.
இந்த விஷயத்தை தோழிகள் மூலம் கேள்விப்பட்டகாஜல் அடுத்த ஒரு வாரத்தில் நாடு திரும்பியவுடன் இதற்கான நீண்ட விளக்க்கத்தை தரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிஷா அகர்வால், விம்பிள்டன் போட்டியை பார்த்து ரசிக்கும் புகைப்படங்கள் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment