Sunday, April 21, 2013


லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுக்கு வேலூரில் பெண் பார்த்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வல்லவன் படத்தில் நடித்த போது சிம்பு- நயன்தாரா நெருக்கமாக பழகினர்.

இதையடுத்து இருவரும் ஜோடியாக வலம் வந்தனர். இந்நிலையில் சிம்புவுவை விட்டு பிரிந்த நயன்தாரா, பிரபுதேவாவுடன் ஊர் சுற்றினார்.

இதனையடுத்து சிம்பு அந்த முன்னணி நடிகையை காதலிக்கிறார், இந்த நடிகையை காதலிக்கிறார் என்று அவ்வப்போது தகவல்கள் வரும்.

இந்நிலையில் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க டி.ராஜேந்தர் முடிவு செய்து பெண் பார்க்கும் படலமும் வேகமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே சிம்புவுக்கு வேலூரில் ஒரு பெண்ணை பார்த்தார்களாம். பெண் பிடித்துப் போக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பெண் ஓகே ஆனால் இந்த ஆண்டே திருமணம் தானாம். சிம்பு முகத்தில் இப்பொழுதே புதுமாப்பிள்ளை களை வந்துவிட்டதாக கொலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below