Sunday, April 21, 2013


நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா மீது கோடம்பாக்கமே கடும் கோபத்தில் இருக்கிறது.
கோடம்பாக்கத்தில் இருந்து எந்தவொரு நடிகரோ, நடிகையோ படப்பிடிப்புக்காககூட இலங்கைக்கு செல்லக்கூடாது என்றொரு கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழில் பிசியாகி இந்திக்கு சென்ற அசின், பாலிவுட் படத்துக்காக இலங்கை சென்று வந்தார்.
இந்த ஒரே காரணத்துக்காக அவரை தமிழ்ப்படத்தில் நடிக்க வைக்கக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கில் தான் இயக்கியுள்ள ராமைய்யா வாஸ்தவைய்யா என்ற படத்தில் ஒரு நாயகியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வைத்துள்ள பிரபுதேவா, இன்னொரு வேடத்தில் நடிக்க ஜாக்குலின் பெர்ணான்டஸ் என்றொரு சிங்கள நடிகையை நடிக்க வைத்துள்ளாராம்.
இந்த விசயத்தை இதுவரை ரகசியமாகத் தான் வைத்திருந்தார். ஆனால் இப்போது படம் திரைக்கு வருவதால் வெளியில் கசிந்து விட்டது.

அதோடு மேற்படி நடிகையும் ஆந்திர மீடியாக்களுக்கு தான் கொடுக்கும் பேட்டிகளில் தனது வரலாற்றை சொல்லி விட்டதால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கோலிவுட் கலைஞர்கள் கடும் ஆவேசமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமா நடிகரான பிரபுதேவா, எப்படி ஒரு சிங்கள நடிகையை தனது படத்தில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லிக்கொண்டு, அவர் அடுத்து தமிழ்நாட்டுப்பக்கம் வரட்டும் என்று போர்க்கொடி பிடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below