அப்பா கமல், அம்மா சரிகா என நடிப்புப் பிண்ணனியில் இருந்து வந்த ஸ்ருதி, சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சில படங்களிலேயே முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்டவர்.
ஸ்ருதிஹாசன், தற்போது தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார். டிடே என்ற இந்தி படத்தில் விலைமாதுவாக நடித்திருக்கும் ஸ்ருதி தற்போது பலரின் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.
காரணம், இப்படத்தில் வரும் அவரது பெட்ரூம் காட்சி புகைப்படங்கள் வெளியானது தான்.
அவர்களின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ருதி கூறியிருப்பதாவது…..
சினிமாவில் நடிப்பவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். மேலும், நடிப்பவர்கள் எடுத்துக்கொள்ளும் கேரக்டருக்கேற்ப நடித்தாக வேண்டிய நிலை உள்ளது. அப்படி நடிக்கிறபோதுதான் அந்த கேரக்டர் முழுமை பெறும்.
அதனால்தான், விலைமாது ரோல் என்கிறபோது விலைமாதுவாகவே மாறி விடுகிறேன். அதனால் இதை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.என்னைப்பொறுத்தவரை வாழ்க்கை முழுவதும் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கவே ஆசைப்படுகிறேன்.
அதனால் எதிர்காலத்தில் நான் திருமணம் செய்து கொள்ள முற்படும்போது, என்னை புரிந்து கொண்டு, எக்காரணம் கொண்டும் என் நடிப்புக்கு தடைபோடாதவரையே திருமணம் செய்து கொள்வேன்’ எனத் தெரிவித்துள்ளார் ஸ்ருதி.
0 comments:
Post a Comment