நடிகைகளுக்குப் பெரிய பிரச்சினையாக இருப்பது உடல் எடை. கொஞ்சம் சதை போட்டாலும் பிரச்சினை, சதையே இல்லாமல் சைஸ் ஸீரோவானாலும் வம்பு.வந்தபுதிதில் கொடிகட்டிப் பறந்து பின், கண்டபடி வெயிட் ஏறியதால் அதனை குறைக்க கடும் பிரயத்தனத்தில் இருக்கிறார்கள் சில நடிகைகள்.
ஏ.வெங்கடேஷ், ஷக்தி சிதம்பரம் போன்றோர் கதையை தீர்மானிப்பதற்கு முன் நமிதாவின் கால்ஷீட் வாங்கி வைத்துக் கொண்ட காலம் ஒன்று இருந்தது.அந்தளவு இனம் இரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தார் நமீ. ஆனால் இப்போது அவர்களே நமிதா இலாமல்தான் படம் எடுக்கிறார்கள். காரணம் நமிதாவின் ஓவர் வெயிட்.
இது நமிதாவுக்கு தெரிந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இளமைப் போன பின் வாய்ப்பு வருமா? திடீர் ஞானோதயத்தால் உடம்பை இளைக்க வைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்.
நமிதாவைப் போல் உடம்பு இளைக்கும் உடற்பயிற்சியை செய்து வரும் இன்னொரு நடிகை மாளவிகா. திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு நடிக்கும் ஆர்வம் வந்திருக்கிறது மாளவிகாவுக்கு.
அதற்கு முதல் தடை, பெருத்துப்போன உடம்பு. உடம்பை குறைங்க, வாய்ப்பு தர்றோம் என இயக்குனர்கள் சொன்னதால் உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
பூனம் பஜ்வாவுக்கு அப்படியொன்றும் வயதாகவில்லை. ஆனால் உடம்பு மட்டும் ஊதிக் கொண்டே போகிறது. மலையாளத்தில் அவரது தோற்றத்துக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தாலும் தமிழ், தெலுங்குதான் டார்கெட்.
பெருத்த உடம்பை வைத்து ஒன்றும் செய்ய இயலாது என்பதால் ஒன்றிரண்டு கிலோவாவது குறைப்போம் என முடிவெடுத்து முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
இதேபோல் இன்னும் ஒரு டஜன் நடிகைகள் வெயிட்டிலிருந்து லைட்டாகும் முயற்சியில் இறங்கியிருப்பதாக கோலிவுட் செய்திகள் கூறுகிறன.
0 comments:
Post a Comment