ஹன்சு ஹீரோயினுக்கும் இனிஷியல் ஹீரோவுக்கும் லவ் ஃபார்ம் ஆயிடுச்சுன்னு இண்டஸ்ட்ரியே கிசுகிசுக்குதாம்… கிசுகிசுக்குதாம்… இதுபத்தி ரெண்டு தரப்புலேயும் மறுக்காததால லவ் கன்பார்ம்னு பேசுறாங்களாம்.
எதையும் சீரியஸா எடுத்துட்டு பதில் சொல்லும் இனிஷியல் நடிகர், இந்த மேட்டர்ல அடக்கியே வாசிக்கறாராம். ஹன்சு தரப்பு இப்போ திடீர்னு, லவ்வா.. அப்படியான்னு ஒண்ணும் தெரியாத அம்மாஞ்சிமாதிரி கேக்குதாம்… கேக்குதாம்…
அண்ணனோட தயாரிப்புல நடிச்சிட்டிருந்த ஸ்டன்ட்கோழி நடிகரு, திடீர்னு புது கம்பெனி ஆரம்பிச்சிட்டாரு. அண்ணன் தயாரிப்போடு நடிகருக்கு ஒத்துவரலே. அதனாலதான் தனியா வந்து கம்பெனி தொடங்கிட்டாருன்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க… பேசிக்கிறாங்க… இனிமே அண்ணன் கம்பெனிக்கு கால்ஷீட் தரமாட்டாருன்னும் பேசிக்கிறாங்களாம்… பேசிக்கிறாங்களாம்…
கீர்த்தியான சாவ்லா நடிகை பேக்பெயினுக்கு மருந்து சாப்பிட்டாராம்… சாப்பிட்டாராம்… அது ரியாக்ஷன் ஆகி உடம்பு பெருத்துப்போச்சாம். இதால வீட்டுலயே முடங்கி கெடந்தாராம். உடம்ப குறைக்கறதா சபதம் பண்ணிட்டு ‘டயட்‘ன்ற பேர்ல பட்டினி கெடக்கறாராம்…
கெடக்கிறாராம்… இதுல உடம்பு குறைஞ்சிருந்தாலும் தெம்பு இல்லாம சோந்துபோயி இருக்காராம். இன்னும் கொஞ்சநாள் பட்டினி கெடந்தா படுக்கைல படுக்க வேண்டியதாயிடும். நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்துÕனு மருத்துவரும், தோழிகளும் எச்சரிக்கை பண்ணிருக்காங்களாம்
0 comments:
Post a Comment