திருமண பத்திரிகை அச்சடித்த பின்னர் திருமணம் நின்றதால் அதிர்ச்சியடைந்தார் நடிகை ரிஷிகா சிங்.கன்னட நடிகையான இவருக்கும் சந்தீப் என்பவருக்கும் இம்மாதம் 15ம் திகதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
திடீரென்று திருமணத்தை சந்தீப் நிறுத்திவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ரிஷிகா சிங் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
து குறித்து ரிஷிகா கூறுகையில், ஏப்ரல் 15ம் திகதி திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக அடிக்கப்பட்ட திருமண அழைப்புகள் என் வீட்டில் இருக்கின்றன.
கல்யாணத்துக்கு வேண்டிய துணிமணிகளும் வாங்கிவிட்டேன். முன்னதாக நடக்க இருந்த நிச்சயதார்த்தம் திடீரென்று நின்றுவிட்டது. நான் மனஅழுத்தத்துக்கு ஆளானேன்.
நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டால் எந்த பெண்ணின் மனதும் பாதிக்கத்தானே செய்யும்.
நிச்சயதார்த்தம் நின்றதற்கு அவரது அம்மாவின் தூண்டுதல்தான் காரணம்.
திருமணத்துக்கு பின்னர் நடிப்பதை நிறுத்திக்கொள்ளும்படி சந்தீப் கூறியதை நான் மறுத்துவிட்டேன். என் மன அழுத்தத்துக்கு ஆயுர்வேத மருந்துடன் மருத்துவ ஆலோசனையும் பெற்றேன்.
மனநிலை பாதித்ததாக என்னைப் பற்றி பரவிய வதந்திகளை நம்பவில்லை என்று நான் சென்ற இடங்களில் ரசிகர்கள் கூறினர் என்றும் அது எனக்கு வலிமையும் எதையும் எதிர்த்துபோராடும் ஆற்றலும் தந்திருக்கிறது எனவும் கூறினார்.
0 comments:
Post a Comment