Thursday, June 6, 2013

மோசடி வழக்கில் சிக்கிக் கைதாகியுள்ள நடிகை லீனா மரியா பால் வீட்டிற்குப் போலீஸார் கைது செய்யச் சென்றபோது போலீஸாருக்கு அதிர்ச்சி அளிக்கும் பல விஷயங்கள் கண்ணில் பட்டதாம்.

கேரளாவைச் சேர்ந்தவர் லீனா மரியா பால். இவரும் அவர் லிவின் மூலம் குடும்பம் நடத்தி வந்தவரான காதலர் சுகாஷ் சந்திரசேகர் என்கிற பாலாஜியும் இணைந்து பெரும் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.

பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடிகளில் இருவரும் ஈடுபட்டனர்.இந்த வழக்கில் லீனா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் சுகாஷ் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

சீரழித்து விட்டானே சுகாஷ்

போலீஸாரிடம் லீனா பரபரப்புத் தகவல்கள் பலவற்றை அளித்துள்ளார். தன்னை சுகாஷ் சீரழித்து விட்டான். அவனை முழுமையாக நம்பினேன். ஆனால் எனது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டான் என்று கூறியுள்ளார் லீனா.

3 முறை கர்ப்பம்- கருக்கலைப்பு

சுகாஷுடன் மனைவி போல குடும்பம் நடத்தியதால் 3 முறை கருத்தரித்துள்ளார் லீனா. பின்னர் கலைத்து விட்டார்.

ஒரு சேலை கூட இல்லை

லீனாவின் வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தியபோதும், அவரைக் கைது செய்யச் சென்றபோதும் போலீஸாருக்கு அதிர்ச்சியான பல விஷயங்கள் தெரிய வந்தன. அதாவது லீனாவிடம் நல்லதாக ஒரு உடை கூட இல்லையாம். சுடிதார் கூட கிடையாதாம். சேலை கிடையாதாம்.எல்லாமே கவர்ச்சியை வெளிக்காட்டக்கூடிய உடைகள்தான் வீடு முழுக்க இருந்ததாம்.

எல்லாமே கவர்ச்சி

அந்த உடைகளை வெளியில் போட்டுக் கொண்டு உலா வர முடியாத அளவுக்கு கவர்ச்சிகரமானவை. எனவே லீனாவைக் கைது செய்ய சென்னையிலிருந்து சென்ற பெண் போலீஸ் ஒருவர் தான் கொண்டு வந்திருந்த தனது சுடிதாரை லீனாவுக்கு அணிய வைத்து அழைத்து வந்தாராம்.

ஆபாசப் படங்கள்

இதுகுறித்துக் கேட்டபோது லீனாவிடம் பதில் ஏதும் இல்லையாம்.மேலும் லீனாவின் வீட்டில் நிறைய ஆபாசப் படங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். எனவே அவர் ஆபாசப் படங்களில் நடித்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு உள்ளது. ஆனால் இதுகுறித்துக் கேட்டால் பதில் சொல்லாமல் லீனா அழுகிறாராம். எனவே அவர் ஆபாசப் படங்களில் நடித்திருக்கலாம் என போலீஸார் நம்புகின்றனர்.

தமிழ் நடிகர்களுக்குத் தொடர்பா?

இந்த நிலையில் சுகாஷுக்கு நெருக்கமான 2 தமிழ் நடிகர்கள் குறித்த விவரமும் போலீஸாருக்குத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அவர்கள் குறித்து லீனாவிடமும் விசாரிக்கவுள்ளனர். 

லீனா விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below