Thursday, May 23, 2013


தொழில் அதிபர் ஒருவரை காதலிக்கிறேன், 2 ஆண்டுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வோம் என லட்சுமிராய் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்திருப்பவர் லட்சுமிராய்.
இவர் தென்னிந்திய தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியானது.

இதுபற்றி லட்சுமிராய் கூறுகையில், எனக்கேற்ற காதலனை நான் தெரிவு செய்துவிட்டேன். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் பழகி வருகிறோம். அவர் ஒரு தொழில் அதிபர்.
ஜோவியலாக, நட்பு முறையில் பழகுபவர், நல்ல மனம் படைத்தவர்.

அவர் யார் என்று கேட்கிறார்கள். தென்னிந்தியாவை சேர்ந்தவர். யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன்.

இவரை போன்ற ஒருவரைதான் வாழ்க்கை துணையாக அடைய வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் நடித்து வருகிறேன்.
எனவே, எனது திருமணம் 2 ஆண்டு கழித்து நடக்கும். திருமணத்துக்கு பிறகு கணவருடன் தொழில் பார்ட்னர் ஆவேனா, தொடர்ந்து நடிப்பேனா என்பது பற்றி இப்போது முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below