இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பார்க்க வேண்டுமென்றால் இரவு நேரங்களில் தான் முடியும் என்பார்கள்.காரணம், இரவு நேரத்தில் இடையூறுகள் அதிகமாக இருக்காது என்பதால் அந்த சமயத்தில் தான் கம்போஸிங் மற்றும் இசைக்கோர்ப்பு பணிகளை நடத்துவார் அவர்.
இப்படி பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை செயல்பட்டு வந்த ரஹ்மான், ஹாலிவுட்டுக்கு சென்றபோது எல்லாமே மாறிவிட்டது.
நேரம் கிடைக்கிறபோதெல்லாம் இசையமைக்கத் தொடங்கினாராம். அதன் காரணமாக, இப்போது மீண்டும் சென்னையில் குடியேறியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், முன்பு மாதிரி இரவு நேரங்களில் இசையமைக்காமல் பகல் நேரங்களில் இசையமைக்கத் தொடங்கி விட்டார்.
இதுக்குறித்து அவர் கூறுகையில், ஆரம்ப காலங்களில் அந்த நேரத்தை நான் தெரிவு செய்தேன். எனக்கு அந்த அமைதி அப்போது தேவைப்பட்டது.
அதோடு, இரவு தூக்கமின்றி இசையமைப்பது கடினமாகவும் தெரியவில்லை. ஆனால், இப்போது நிறைய ஓய்வு தேவைப்படுகிறது.
காரணம், இந்தியா மட்டுமின்றி, அயல்நாடுகளிலும் இசையமைக்க சென்று ஒரு ரவுண்டு வந்து விட்டேன்.
அதோடு கொஞ்சம் வயதும் ஆகி விட்டது. அதனால் பகல் நேரம் இசையமைத்து, இரவு நேரத்தில் ஓய்வெடுத்து வருகிறேன் என்கிறார்.
0 comments:
Post a Comment