அஜித் படத்தில் படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தேன் என்று வந்த செய்தியை மறுத்திருக்கிறார் நடிகை தமன்னா.கேடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த தமன்னா. அதன்பின்னர் கல்லூரி, வியாபாரி போன்ற படங்களில் நடித்தார்.
ஆனால் சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் பையா, ஆகிய படங்கள் தான் அவருக்கு ஹிட் ஹீரோயினாக மாற பாதை அமைத்துக் கொடுத்தது.அதன்பின்னர் விஜய்யுடன் நடித்த சுறா, தனுஷுடன் நடித்த வேங்கையும் வெற்றி பெறாததால் தெலுங்கு பக்கம் போனார்.
அதனால் தமிழ் சினிமாவை விட்டு விட்டு முழுக்க முழுக்க தெலுங்கு படங்களில் மட்டும் நடித்த தமன்னா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அஜித் படத்தில் நடித்து வருகிறார்.
சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தில் நடிகை தமன்னா படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தார் என்று சொல்லப்பட்டது.ஆனால் இது குறித்து தமன்னாவிடம் கேட்டால் உடனே மறுக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை கிளாமருக்கு ஒருபோதும் நான் தடை சொன்னதில்லை. காரணம் என் உடல்கட்டுக்கு கிளாமர் உடைகள்தான் மேட்சாக இருக்கும்.பையா படத்தில் கூட நான் மழையில் நனைந்தபடி ஆடிப்பாடிய பாடல்களைத்தான் ரசிகர்கள் அதிகமாக ரசித்தார்கள்.
அந்த வகையில், என்னால் முடிந்த வரை கவர்ச்சி விருந்து கொடுத்திருக்கிறேன். அப்படிப்பட்ட நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன்.முழுக்க நனைந்த பின்னர் யாராவது முக்காடு போட என்னிடம் எதுவும் இல்லை என்று சொல்லும் தமன்னா, அஜித் படத்தில் எந்த அளவுக்கு கிளாமராக நடிக்க சொன்னாலும் ரெடியாக இருக்கிறேன் என்கிறார்.
0 comments:
Post a Comment