கடந்த ஆண்டு விபச்சார வழக்கில் கைதானதாக வதந்தி ஒன்று ஊடகங்கள் பலவற்றில் பரவி, பிரபலமடைந்தவர் நடிகை சனாகான்.
இந் நிலையில்…
சல்மான் கானின் மெண்டல் படத்தில் நடித்து வரும் நடிகை சனா கான், சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வருவதால், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக 15 வயதுச் சிறுமியை வலுக்கட்டாயமாகக் கடத்த முயன்றார் என்று சனாகான் மீது கடத்தல் வழக்கு பதியப் பட்டது. இந்நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
நவி மும்பை காவல்துறையினர் ஏற்கெனவே இது தொடர்பாக சனா கானின் உறவினர் நவேத் கான்(22), அவருடைய நண்பர்கள் க்ஷிதிஜ் துபே(22) விஸ்மித் அம்ப்ரே(23), 17 வயதுச் சிறுவன் ஒருவன் என 4 பேரைக் கைது செய்துள்ளனர்.
25 வயதாகும் சனா கானை தேடி வருவதாக நவி மும்பை டுர்பே காவல் நிலைய ஆய்வாளர் பாண்டுரங்க சாவந்த் கூறியுள்ளார். சனா கான் தலைமறைவாகியுள்ளதால், மெண்டல் திரைப்படப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாம்.
கடந்த நவம்பர் மாதம், ஒன்பதாம் வகுப்பு பயிலும் சிறுமி,, நவேத்துடன் பேஸ்புக் மூலம் பழகியுள்ளார். பின்னர் இருவரும் சந்தித்துள்ளனர். சில மாதங்களில், நவேத் அந்தச் சிறுமியிடம் தன்னை திருமணம் செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்தச் சிறுமி மறுத்துவிட்டு, பின்னர் நவேத்தை சந்திப்பதைத் தவிர்த்ததுடன், பேஸ்புக் தொடர்பையும் துண்டித்துக் கொண்டுள்ளார்.
ஏப்ரல் 30 ஆம் தேதி சன்படா பகுதியில் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை வழிமறித்தார் நவேத், அப்போது பிஎம்டபிள்யு காரில் இருந்த சனாகான் மற்றும் நண்பர்கள் மூவரும் அந்தச் சிறுமியை இழுத்து காருக்குள் தள்ள முயன்றனர். ஆனால் சிறுமி அவர்களிடம் இருந்து தப்பி கூச்சல் போட்டு தனது வீட்டுக்கு ஓடிவிட்டார். ஆனால், அந்தச் சிறுமி அவரது வீட்டுக்குச் செல்லும் முன்னரே சனா கான் உள்ளிட்டோர் அவளது வீட்டுக்குச் சென்று, கோபாவேசமாகப் பேசியுள்ளனர்.
இதை அடுத்து அந்தச் சிறுமியின் தாய் மே 1 ஆம் தேதி காவல்துறையை அணுகி புகார் அளித்துள்ளார். இதை அடுத்து சனா கான் மீது கடத்த முயற்சி செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment