Thursday, April 11, 2013


மார்க்கெட்டில் பிசியாக இருந்த நடிகைகள், ஒரு இரண்டு மாதம் படவாய்ப்பு  இல்லையென்றால், மூட்டை முடிச்சுகளோடு சொந்த ஊருக்கு ரயிலேறி விடுவார்கள்.  ஆனால், நமீதாவுக்கு இளைஞன் படத்தில் வில்லியாக நடித்தபிறகு படங்களே இல்லை.  

ஆனபோதும், என்னமோ கைநிறைய படங்கள் இருப்பதுபோல் இன்னமும்  கோடம்பாக்கத்தையே சுற்றி சுற்றி வருகிறார். ஆடியோ விழாக்களுக்கு அந்த  படங்களில் நடித்த கதாநாயகிகளே வராதபோதும், நமீதா ஆஜராகி விடுகிறார்.

ஆனால்  அப்படி வரும்போது, மேடையில் மற்றவர்களை கவர என்னென்ன பேச வேண்டும் என்று  ரிகர்சல் பார்த்து விட்டு வந்து, மைக்கைப்பிடித்து கடித்து துப்புகிறார்.  இருப்பினும், பேசுவது நமீதாவாயிற்றே, அதனால் அவர் என்ன பேசினாலும் அதற்கு  கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறது ரசிகர் பட்டாளம். இப்படியாக  சமீபகாலமாக சினிமா விழாக்களுக்கு விசிட் அடிக்கும் நமீதா, முன்பு  மாதிரியெல்லாம் துக்கடா துணிகளை அணிந்து வராமல், புடவை கட்டி பக்கா  தமிழச்சி போலவே வருகிறார்.

அதைப்பார்த்து, இதென்ன திடீரென்று  புடவைக்கு மாறிட்டீங்க? என்று யாராவது கேட்டால், புடவைக்கு நான் இப்ப  மாறலீங்க. எப்ப சென்னைக்கு வந்தேனோ அப்பவே மாறிட்டேன். சினிமாவுல நடிக்காத  நேரங்கள்ல புடவையிலதான் அதிகமாக இருப்பேன். 

அந்த வகையில இப்ப எனக்கு  பிடித்த காஸ்டியூமே புடவைதான் என்று ஒரு பெரிய விளக்கமே கொடுக்கிறார்  நமீதா.

மேலும் இனிமேல் சினிமா வாய்ப்புக்காக காத்திருக்காமல் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து குஷ்பு போல அரசியலையும் கலக்கலாம் என்ற முடிவில் நமீதா இருப்பதால், புடவைக்கு மாறியதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது 

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below