Wednesday, May 8, 2013


செக்ஸ் உள்ளிட்ட சமாச்சாரங்களை அள்ளித் தெளிக்கும் பிரபல மாத இதழான ‘மேக்ஸிம்’ இதழுக்காக ஆடை துறந்திருக்கிறார் நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன்.

‘மேக்ஸிம்’ மாத இதழின் இந்தியப் பதிப்பின் இந்த மே மாத இதழின் அட்டைப்படத்தில் ஸ்ருதியின் படு கவர்ச்சியான படம் ஆபாசத்தை மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்ததைப் போல வெளிவந்துள்ளது.


இதை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் ஒருபக்கம் முகம் சுளிக்க, இன்னொரு பக்கம் ஸ்ருதிஹாசனின் அப்பாவும், உலக நாயகனுமாகிய கமல் ஸ்ருதியின் இந்த போட்டோஷூட் புகைப்படங்களைப் பார்த்து ஆடிப்போயிருக்கிறாராம்.

அந்த வகையில் இந்த போட்டோஷூட் குறித்து அவரிடம் எந்த தகவலையும் ஸ்ருதி தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. கமல் எப்போதுமே மகள் ஸ்ருதியின் முடிவுகளில் தலையிடுவதில்லை என்பதால் இதுபற்றி அவர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தற்பொழுது தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசனின் இந்த அதிரடியான கவர்ச்சி போட்டோக்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் உள்ள பிரபல நடிகைகளின் மத்தியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

‘மேக்ஸிம்’ எடுத்த இந்த பிரத்யேக போட்டோஷுட்டுக்காக பெரிய தொகை ஒன்றையும் ஸ்ருதி சம்பளமாக பெற்றுள்ளார். ஸ்ருதியின் இந்த படுகவர்ச்சியான புகைப்படங்களைப் பார்த்த பலரும் பல விதத்தில் விமர்சனம் செய்தாலும், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below