இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் அவரது வருங்கால மனைவி சைந்தவியும் அஜீத் குமாரை நேரில் சந்தித்து தங்கள் திருமண அழைப்பிதழை அளித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது நீண்டநாள் காதலியான பாடகி சைந்தவியை வரும் ஜூன் மாதம் 27ம் தேதி மணக்கிறார். அவர்களின் திருமணம் சென்னையில் உள்ள மேயர் ராமனாதன் செட்டியார் ஹாலில் நடைபெறுகிறது. தங்கள் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு காதல் ஜோடி தங்களுக்கு நெருக்கமானவர்களை அழைத்து வருகிறது.
இந்நிலையில் அவர்கள் அஜீத் மற்றும் குடும்பத்தாரை சந்தித்து அழைப்பிதழ் அளித்துள்ளனர். அஜீத் நடித்த கிரீடம் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தார்.
அந்த படத்தில் வரும் அக்கம் பக்கம் பாடல் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment