நடிகை பூஜா காந்தி கரிமேடு என்ற படத்தில் ஜாக்கெட் அணியாமல் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பெங்களூர் அருகே உள்ள தண்டுபாளையம் என்ற இடத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது.
அந்த பகுதியில் 91 கற்பழிப்புகள்,106 கொலைகள், 203 கொள்ளைகள் நடந்தன. இத்தகு அக்கிரமங்கள் செய்த மனித மிருகங்களை காவல்துறையினர் எப்படி வேட்டையாடினார்கள் என்பதே கதை.
இதில் பூஜாகாந்தி கொடூர கொலைகள் செய்யும் வில்லியாக வருகிறார். அவருடன் மக்ராந்த் தேஷ்பாண்டே, ரவிசங்கர், சீனிவாச மூர்த்தி, பிரியங்கா கோத்தாரி, ரகுமுகர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் கன்னடத்தில் ஏற்கனவே வசூல் குவித்துள்ளது. இதை தமிழில் ராம நாராயணன் வெளியிடுகிறார்.
இப்படம் குறித்து ராமநாராயணன் கூறியதாவது:-
கரிமேடு படத்தை கன்னடத்தில் பார்த்து அதிர்ந்தேன். ஆங்கில படங்களுக்கு நிகராக விறுவிறுப்பாக எடுத்து இருந்தனர். வீடுகளில் குடிக்க தண்ணீர் கேட்டு உள்ளே புகும் ஒரு கும்பல் பெண்களை கற்பழித்து கொன்று கொள்ளையில் ஈடுபட்ட உண்மை சம்பவத்தை விறுவிறுப்பாக படமாக்கி இருந்தனர்.
இந்த கொலைகார கும்பலில் இருக்கும் ஒரு பெண்தான் பூஜாகாந்தி அபாரமாக நடித்துள்ளார். ஜாக்கெட் அணியாமல் அரைநிர்வாணத்தில் துணிச்சலாக நடித்து இருக்கிறார். இதற்காக அவருக்கு கர்நாடகாவில் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. படம் என்னை கவர்ந்ததால் தமிழில் இம்மாதம் இறுதியில் வெளியிடுகிறேன். வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இது இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்படத்தை சீனிவாசலு இயக்கியுள்ளார். அர்ஜூன் கென்யா இசையமைத்துள்ளார். பாடல்களை விவேகா எழுதியுள்ளார்.
0 comments:
Post a Comment