சித்தார்த், ஹன்சிகா, கொமடி ஸ்டார் சந்தானம், கணேஷ் வெங்கட் ராம் மற்றும் பலர் நடித்துள்ள தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார்.யுடிவி தயாரிக்கும் இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில், கூச்ச சுபாவமான நாயகனாக சித்தார்த் நடித்துள்ளார்.
ஐ.டி., நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து அழகான பெண்ணை லவ் பண்ண வேண்டும் என்ற உயரிய லட்சியத்தோடு இருக்கிறார்.
அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து நாயகனின் காதல் கனவை சிதறடிக்கிறார் கணேஷ் வெங்கட் ராம்.
இந்நிலையில் சஞ்சனா என்ற அழகிய பெண் (ஹன்சிகா) ,ஆபிசில் 'ப்ரோகிராமர் 'பணியில் அமர்கிறார்.
சஞ்சனாவின் பார்வை மிஸ்டர் ஸ்மார்ட் கணேஷ் வெங்கட் ராமின் மீது விழுகிறது. லவ் டாக்டர் மிஸ்டர் நோக்கியா சந்தானத்தின் உதவியை நாடுகிறார் நாயகன் சித்தார்த்.
கணேஷ் வெங்கட் ராம் - ஹன்சிகா இருவரின் நட்பை லவ் டாக்டர் சந்தானம் உடைக்கிறாரா? நாயகன் சித்தார்த், நாயகி ஹன்சிகா இருவரையும் சேர்த்து வைக்கிறாரா என்ற எதிர்பார்ப்புகளையும் பல திருப்பங்களையும் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் சொல்லியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சுந்தர்.சி.
0 comments:
Post a Comment