நேற்று மதியம் தனது அண்ணன் ரவி சங்கரை அஞ்சலி போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனது சித்தி பாரதி தேவியை ராட்சசி என்று திட்டியவர் தன்னுடன் ஹோட்டலில் தங்கியிருந்த சித்தப்பா பாபுஜி செருப்பால் அடித்ததாகவும், தலைமுடியை பிடித்து கன்னத்தில் அறைந்ததாகவும் அஞ்சலி தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போன அஞ்சலி தற்போது பெங்களூருவில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் தனது தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு பேசினார்.
அதேபோல் தனது அண்ணன் ரவி சங்கரையும் தொடர்பு கொண்டிருக்கிறார். தன்னுடன் ஒருவர் இருப்பதாகவும், பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்த உரையாடலின் போது அஞ்சலி கூறியுள்ளார்.
ரவிசங்கர் அஞ்சலியுடனான பேச்சை பதிவு செய்துள்ளார். இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசவிருப்பதாகவும் அஞ்சலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment