நடிகை லீனா மரியா பால் பல கோடி மோசடியில் கைதாகியுள்ளார். இந் நிலையில், தான் பாலாஜி என்கிற சுகாஷ் சந்திரசேகருடன் லிவிங் டுகெதர் முறையில் மனைவியாகவே வாழ்ந்ததால் கர்ப்பமாக உள்ளேன். என்னை சிறைக்கு அனுப்ப வேண்டாம்,” என்று டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு கதறி அழுதார்.
லீனாவின் ஆண் நண்பர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர். இவர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டு லீனாவுடன் சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கி கிளை ஒன்றுக்கு சென்று இருக்கிறார். பெரிய திட்டம் ஒன்றை தொடங்குவதாக கூறி, அதற்காக அவர்கள் அந்த வங்கி கிளையில் ரூ.19 கோடி கடன் வாங்கி உள்ளனர்.
அதன்பிறகு அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக கனரா வங்கி கிளையின் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்த நடிகை லீனா மரியா பாலை கைது செய்தனர்.
நடிகை லீனாவை டெல்லி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் லீனா கதறி அழுதார். “நான், சுகாசுடன் மனைவி போலவே வாழ்ந்தேன். அதன் விளைவாக நான் கர்ப்பமாக உள்ளேன்.
என்னை ஜெயிலுக்கு அனுப்பாதீர்கள், மோசடியில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, விட்டு விடுங்கள்,” என்று கெஞ்சினார்.
சென்னைக்கு… ஆனால் மாஜிஸ்திரேட்டு, 72 மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு சென்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நடிகை லீனாவை பாதுகாப்பாக ரெயிலில் சென்னை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
இந் நிலையில் அவர்கள் வரும் ரெயில் இன்று வியாழக்கிழமை இரவு சென்னை சென்ட்ரலுக்கு வருகிறது.
0 comments:
Post a Comment