திஹார் ஜெயிலில் முதல் நாள் இரவை தூங்காமல் கழித்தார் ஸ்ரீசாந்த் என ஜெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதாகி, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போலீஸ் காவலில் இருந்தார் ஸ்ரீசாந்த்.
போலீஸ் விசாரணையில் இருந்த அவர், நேற்று முன் தினம் கோர்ட் உத்தரவுப்படி, நீதிமன்ற காவலில், முதலாம் எண் திஹார் ஜெயிலில் தற்போது உள்ளார். ஜெயில் வாழ்க்கையில் ஒட்டியும்,ஒட்டாமலும் வாழ்ந்து வருகிறார் என ஸ்ரீசாந்த் உள்ள ஜெயிலில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு விசாரணை கைதிகள் மட்டும் உள்ள சிறிய செல்லில் அடைக்கப்பட்ட ஸ்ரீசாந்த், யாருடனும் அதிகம் பேசவில்லையாம்.
இரவைக் கழிப்பதற்கு உதவியாக மெத்தையும், போர்வையும் அவருக்கும் வழங்கப்பட்டதாம். வரிசையில் நின்று மற்றவர்களைப் போலவே சமர்த்தாக உணவு வாங்கி சாப்பிட்டாராம்.
ஆனால், இரவில் தூக்கம் தான் வரவில்லையாம்.நின்று, நடந்து, உட்கார்ந்தும் இரவைக் கழித்துள்ளார் ஸ்ரீசாந்த்.
தேநீர் அருந்தி, பிஸ்கட்டுகள் சாப்பிட்டு நேற்றைய பொழுதைத் தொடர்ந்த அவரின் பொழுதுகள் மௌனமாகவே கழிகிறதாம்.
0 comments:
Post a Comment