Thursday, May 30, 2013

நம்மில் பலருக்கும் நாள் முழுசும் கூடவே இருக்கறது பேஸ்புக். பேஸ்புக்-கில் ஸ்டேடஸ், லைக், கமெண்ட்ஸ், சாட்டிங் என பலவாறாக யூஸ் செய்துட்டு இருப்போம். அதில், ஸ்டேடஸ்-க்கு கமெண்ட்ஸ் போடுகையில் ஸ்மைலி சேர்க்கும்படியான வசதி ஏற்கனவே உள்ளது. மெசேஜ் பாக்ஸிலும் ஸ்மைலி சேர்க்கும் வசதி உள்ளது.

அது போல தற்பொழுது ஸ்டேடஸ் போடும் பொழுதும் நம் செய்திக்கேற்ற ஸ்மைலி சேர்க்கலாம். அதற்கான வசதி தற்பொழுது பேஸ்புக்-கில் புதியதாக சேர்த்துள்ளார்கள். சிலருக்கு முன்னோட்டமாக இந்த வசதி ஏற்கனவே இருந்திருக்கும்.


ஸ்மைலி - SMILEY எவ்வாறு இணைப்பது?
1. உங்கள் பேஸ்புக் பக்கத்தில் மேலே ஸ்டேடஸ் இடும் கட்டத்தை க்ளிக் செய்யவும்.

க்ளிக் செய்தால் மேலே படத்தில் உள்ளவாறு ஸ்டேடஸ் கட்டம் திறக்கும். அதில் what's on your mind? என்ற வாக்கியம் உள்ள கட்டத்திற்கு கீழே நான்கு ஐகான்கள் இருக்கும். அதில் கடைசியாக இருப்பதே ஸ்மைலி இணைப்பதற்கான ஐகான் ஆகும்.

2. நாம் தெரிவிக்க வேண்டிய செய்தியை கட்டத்தில் டைப் செய்ய வேண்டும்.
டைப் செய்த பின் ஸ்மைலி உள்ள இடத்தில் க்ளிக் செய்தால் ஸ்மைலி பாக்ஸ் ஓபன் ஆகும்.
பார்க்க கீழே உள்ள படம்...
ஸ்மைலி பாக்ஸில் ஆறு விதமான ஸ்மைலி தொகுப்பு உள்ளது. இதில் மேற்கண்ட படத்தில் உள்ள ஸ்டேடஸ்-க்கு Feeling என்ற தொகுப்பை க்ளிக் செய்துள்ளேன்.

க்ளிக் செய்த பின் கீழே படத்தில் உள்ளவாறு நிறைய ஸ்மைலி கொண்ட தொகுப்பு திறக்கும்.

இதில்நான் great என்ற ஸ்மைலியை தேர்வு செய்துள்ளேன். தேர்வு செய்த பின் கீழே படத்தில் உள்ளவாறு நமது ஸ்டேடஸ்-க்கு அடுத்து அந்த ஸ்மைலி தோன்றும்.

பின்னர் post என்பதை க்ளிக் செய்து நமது செய்தியை ஸ்மைலியுடன் நண்பர்களுக்கு பகிரலாம்.

பேஸ்புக் நண்பர் டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி என்பவர் அவரது செய்தியை இந்த ஸ்மைலியுடன் பகிர்ந்திருக்கும் படம். 
இந்த ஸ்மைலி வசதி எல்லா பேஸ்புக் பயனாளிகளுக்கும் இன்னமும் கிடைக்கவில்லை. விரைவில் அனைவருக்கும் இந்த வசதி கிடைக்கும்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below