மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்கும் பூர்ணா, கொலிவுட்டில் 'தகராறு', 'படம் பேசும்' படங்களில் நடித்து வருகிறார்.
இது குறித்து பூர்ணா கூறுகையில், நான் நடித்த படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன. மலையாளம், தெலுங்கு மொழிகளில் நல்ல கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடிக்கிறேன்.
கொலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன்.
தகராறு படத்தில் துணிச்சலான மதுரைக்கார பெண்ணாக வருகிறேன்.
உண்மையிலே மதுரைக்கார பெண்கள் எவ்வளவு துணிச்சலானவங்கன்னு படத்தின் இயக்குனர் சொல்லித்தான் எனக்கு தெரியும். மதுரைப் பெண்ணாகவே மாறிட்டேன்.
வழக்கமான நாயகனாக அருள்நிதி இந்தப்படத்தில் நடிக்கவில்லை என்றும் வித்தியாசமான, சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் கூறினார்.
0 comments:
Post a Comment