Saturday, June 8, 2013

நர்த்தகி என்ற தமிழ் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார். இவருக்கு வயது 31. இவர் சிறப்பாக நடித்ததற்காக அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் விருது பெற்றார் இவர்.

இவர் சகோதரி என்ற தொண்டு அமைப்பை நடத்தி திருநங்கைகளுக்கு பலவிதமனா சேவைகளைச் செய்துவருகிறார். இதனை பாராட்டி அமெரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டு இவர் கவுரவிக்கப்பட்டார்.

இவர் புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இவர் புதுச்சேரி சென்றுள்ளார்.
பிறகு இரவு திரும்பியபோது இவரைப் பின் தொடர்ந்து 2 மர்ம ஆசாமிகளும் மோட்டார்சைக்கிளில் துரத்தியுள்ளனர். அவர்கள் கல்கியின் வணியின் மீது மோதி கீழே தள்ளினர்.

பின்னர் இருட்டான பகுதிக்குத் தூக்கிச் சென்று கற்பழிக்க முயன்றுள்ளனர். கல்கி சத்தம் போடவே அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் ஓடி வந்தனர். இதனால் பயந்து போன அந்த 2 ஆசாமிகளும் தப்பிச் சென்றனர்.

இது குறித்து புகார் கொடுக்கச் சென்றால் போலீஸார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். 

இது குறித்து கல்கி கூறுவதைப் பார்ப்போம்:

“முதலில் ஆரோவில் போலீஸ் நிலையத்துக்குச் சென்றேன். சம்பவம் நடந்த இடம் தங்கள் எல்லையில் இல்லை என்று கூறினர். இதையடுத்து கோட்டைக்குப்பம் போலீஸ் நிலையத்திற்குச் சென்றேன். அவர்கள் மகளிர் காவல்நிலையத்திற்குச் செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்களும் புகாரை வாங்க மறுத்தனர்.

ஆரோவில் ஒரு சர்வதேச நகரம் என்பதால் ஏராளமான வெளிநாட்டவர்கள் உள்ளனர்.இவர்களில் நிறைய பெண்களும் உள்ளனர். இந்த வெளிநாட்டுப் பெண்களும் அவ்வப்போது பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றனர்.

எனவே இதுபோன்ற சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறினார் கல்கி.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below