அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ரெசின் எனப்படும் விஷம் தடவிய கடிதத்தை அனுப்பியதாக டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த நடிகையை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியதாக எப்.பி.ஐ. போலீசார் பலரிடம் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், போலீசாரை தொடர்பு கொண்ட ஒரு பெண், அந்த கடிதத்தை எனது கணவர் அனுப்பியிருப்பார் என்று எனக்கு சந்தேகம் உள்ளது என கூறினார்.
தனது சந்தேகத்துக்கு ஆதாரமாக ரிசின் என்ற விஷத்தை தயாரிக்கும் மூலப்பொருளான ஆமணக்கு விதை மற்றும் விஷம் தயாரிப்பது தொடர்பாக அவரது கணவர் இண்டர்நெட்டில் தகவல்களை தேடியது போன்றவற்றை அந்த பெண் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, அவரது கணவரிடம் விசாரித்து வந்தபோது போலீசாரின் சந்தேகம் அந்த பெண்ணின் பக்கம் திரும்பியது.
சில டி.வி. சீரியல்களில் நடித்துள்ள ஷன்னான் ரிச்சர்ட்சன்(35) என்ற அந்த பெண், தனது கணவரை போலீசில் மாட்டிவிட நாடகம் ஆடுகிறாரோ? என்று நினைத்து தங்களது சந்தேகப் பார்வையை நடிகையின் மீது படரவிட்ட போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குற்றம் நிரூபிக்கபட்டால் அந்த பெண்ணுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என போலீசார் கூறினர்.
0 comments:
Post a Comment