Saturday, June 8, 2013

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தியிருக்கும் விஜய் நடித்த தலைவா படம் வருகின்ற ஓகஸ்ட் 9ம் திகதி வெளியாகிறது.

விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

விஜய்க்கு ஜோடியாக அமலா பால், தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் மற்றும் குமார் இசையமைத்துள்ளார். முதலில் இந்தப் படத்தை விஜய் பிறந்த நாளான யூன் 22-ம் திகதி வெளியிட திட்டமிட்டனர்.

ஆனால் பட வேலைகள் முடியவில்லை. எனவே அவர் பிறந்த நாளன்று ஓடியோவை மட்டும் வெளியிடுகின்றனர். சோனி நிறுவனம் இதனை வெளியிடுகிறது. இப்போது பட வெளியீட்டுத் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வருகின்ற ஓகஸ்ட் 9-ம் திகதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை வேந்தர் மூவீஸ் எஸ் மதன் பெற்றுள்ளார்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below