ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் பலர் கைது செய்யப்பட்டிள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக விஐபிகளுக்கு பெண்களை சப்லை செய்த சேலத்தைச் சேர்ந்த விபச்சார கும்பல் தலைவி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
ஆந்திராவை சேர்ந்த ஒரு இளம்பெண் திருச்சியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து கற்பழிக்கப்பட்டார். அந்த பெண்ணை மீட்ட காவல்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக வாழப்பாடியை சேர்ந்த கவிதா, சேலம் மரவனேரியில் பெண்கள் அழகுநிலையம் நடத்தி வந்த காவ்யா (40) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காவ்யாவின் உண்மையான பெயர் அருணாதேவி. அவரை விபசார கும்பலை சேர்ந்தவர்கள் மட்டுமே காவ்யா என்று அழைத்து வந்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது. சேலத்தில் முதன் முதலில் அவர் ஜங்ஷன் மெயின் ரோடு பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். அப்போது அவர் கல்லூரி மாணவிகள், சில குடும்ப பெண்களை வி.ஐ.பி.க்களுக்கு சப்ளை செய்து வந்தது தெரிவந்தது. அதை அடுத்து சோதனை நடத்திய காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
விபசார கும்பல் தலைவியாக செயல்பட்ட அருணாதேவி சேலத்தில் உள்ள அனைத்து விபசார கும்பலுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களிடம் இருக்கும் பெண்களை முக்கிய வி.ஐ.பிக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அரசுத்துறை அதிகாரிகளுக்கு சப்ளை செய்து உள்ளார். இதன் மூலம் தேவையான காரியத்தை சாதித்து கொண்ட அருணாதேவி, கோடி கோடியாக பணமும் சம்பாதித்து இருக்கிறார்.
அதோடு இல்லாமல் சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் விபசார கும்பல்களின் தேவைக்கு ஏற்ப அழகிகளை அனுப்பி வைத்து அதன் மூலமும் பணம் சம்பாதித்து உள்ளார். மேலும் அருணாதேவி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மற்றும் கென்யா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து கல்வி, தொழில் ரீதியாக சேலம் வரும் இளம்பெண்களை வளைத்து போட்டு அவர்களையும் பலருக்கு விருந்தாக்கி இருக்கிறார்.
இதன் மூலம் அருணாதேவி கோடி கோடியாக பணத்தை சம்பாதித்து பல இடங்களில் வீடு, பங்களா வாங்கி போட்டு இருக்கிறார். மேலும் அவர் மீது அழகாபுரம், சூரமங்கலம், டவுன், ஏற்காடு காவல் நிலையங்களிலும் விபச்சார வழக்குகள் உள்ளன. சமீபத்தில் கொலை செய்யப்பட்ட விபசார கும்பல் தலைவி கிளிஞ்ச வாய் சாந்தியும், அருணாதேவியும் தொழில் பாட்னராக இருந்து உள்ளனர்.
அருணாதேவியிடம் காவல்துறையினர் யார்-யாருக்கெல்லாம் அழகிகளை சப்ளை செய்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் பல அரசியல் வாதிகள், அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். மேலும் அருணாதேவியை போலவே சேலத்தில் பலர் விபசார தொழிலை நடத்தி வருகிறார்கள். பலவீனமான பெண்களையும், பணத்துக்கு ஆசைப்படும் பெண்களையும் மயக்கி அவர்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தி பணத்தை சம்பாதித்து வருகிறார்கள்.
எனவே சேலத்தில் உள்ள அனைத்து விபசார கும்பல் குறித்தும் காவல்துறை பட்டியல் சேகரித்து விசாரிக்க தொடங்கி இருக்கிறார்கள். மேலும் அருணாதேவியுடன் நெட்வொர்க் அமைத்து விபசாரம் செய்தவர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. சினிமாவை போல் தொடரும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
0 comments:
Post a Comment