தனது இரு மார்பகங்களையும் அகற்றி விட்ட ஹாலிவுட் நடிகை ஏஞ்செலீனா ஜூலி அடுத்து தனது கர்ப்பப் பையையும் அகற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் தனது இரு மார்பகங்களையும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி பரபரப்பை ஏற்படுத்தினார் 37 வயதான ஜூலி. மார்பக புற்றுநோய் தாக்குதலிலிருந்து தப்பிக்க துணிகரமாக இந்த அறுவைச் சிகிச்சையை அவர் செய்து கொண்டார். இந்த நிலையில்அடுத்து மேலும் ஒரு மேஜர் ஆபரேஷனுக்கு அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அவருக்கு கர்ப்பப் பையில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனராம். அதாவது 50 சதவீத வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனராம். இதையடுத்து பேசாமல் கர்ப்பப் பையை எடுத்து விடலாம் என்ற எண்ணத்திற்கு வந்துள்ளாராம் ஜூலி.
இந்த தகவலை பீப்பிள் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. கர்ப்பப் பையை எடுத்துவிட்டால் தனக்கு புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்பே இல்லாமல் தடுத்து விட முடியும் என அவர் கருதுகிறாராம். ஜூலியின் மனதில் என்ன இருக்கிறது என்பது அவரே வெளியில் சொன்னால்தான் தெரியும்
0 comments:
Post a Comment