Thursday, June 6, 2013

நடிகை அஞ்சலி சித்தி பாரதிதேவியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமைபடுத்துவதாகவும், சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகளையும் கூறினார்.

பின்னர் ஐதராபாத் பொலிஸில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில் டைரக்டர் களஞ்சியம் சைதாப்பேட்டை பெருநகர 17-வது கோர்ட்டில் அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

தன் மீது பொய் புகார் கூறிய அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். அவரது வக்கீல்கள் ஜெயபிரகாஷ், சுரேஷ்பாபு ஆகியோர் இம்மனுவை தாக்கல் செய்தனர்.

வழக்கை நீதிபதி ராஜலட்சுமி விசாரித்து அஞ்சலி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அஞ்சலி ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below